இது தொடர்பாக அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
ஹலால் சான்றிதழுக்கு எதிராக பொது பலா சேனா என்னும் சிங்கள அமைப்பு தொடர்ச்சியாக பிரச்சாரங்களும் போராட்டங்களும் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பல முஸ்லிம் அமைச்சர்கள் இந்த அரசில் இருந்தும் ஹலால் சான்றிதழுக்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமை முஸ்லிம்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை பெரும்பாலும் அரச நிறுவனமொன்றுக்கு கையளிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.(மூலம்: kattankudyinfo.com)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.