......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 12 February 2013

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடனை தொடர முடியாது

இலங்கையின் தற்போதைய முன்னேற்றகரமான நிலைமை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை அரசாரங்கத்துக்கு மரபு சாராத மற்றும் சிறப்பு நிதி உதவி எதையும் வேண்டி நிற்கவில்லை என்பதால் இலங்கைக்கு நேரடியாக அல்லது மறைமுகமான வரவுசெலவுத்திட்ட உதவி எதையும் நிதியம் கருத்திலெடுக்காது விடக்கூடும்.


இப்போது இலங்கை வளர்ச்சியடைந்து சர்வதேச மூலதன சந்தைகளிலிருந்து கடன்பெறும் ஆற்றலை கொண்டுள்ளது. எனவே வரவுசெலவு திட்டத்துக்கு யாதாயினும் உதவி தேவையெனில் இலங்கையால் அவ்வாறான சந்தை மூலங்களிலிருந்து இலகுவாக பெற்றுகொள்ள முடியும். எனவே வரவுசெலவு திட்ட நிதி திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கேட்கவேண்டியதில்லை.

மேலே கூறிய சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாட்டை கவனத்திலிருந்து இலங்கையின் அதிகாரம் வாய்ந்தோர் சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய நிகழ்ச்சித்திட்டங்களில் இனிமேல் செயற்படுவதில்லை என தீர்மானித்துள்ளனர்.

ஆயினும் ஏனைய பல அங்கத்துவ நாடுகள் போன்று நியமமான ஆலோசனை செயன்முறையின் கீழ் இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புகளை பேணும் என அவர்கள் கூறியுள்ளனர்.



(http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58756-2013-02-12-07-34-37.html)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE