தரமான மருந்துகளை அனுப்ப பு+ரண ஒத்துழைப்பு - சோனியா காந்தி
இலங்கைக்கு தரக்குறைவான மருந்து வகைகளை வழங்கும் இந்திய நிறுவனங்கள் தொடர்பான அறிக்கையொன்றை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இந்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆஷாத்திடம் கையளித்துள்ளார்.
இலங்கைக்கு தரக்குறைவான மருந்து வகைகளை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் தொடர்பில் பூரண விசாரணைகளை இந்திய சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது. கடந்தவாரம் இந்தியாவின் புதுடில்லிக்கு விஜயம் செய்திருந்த சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, புதுடில்லியில் நடைபெற்ற மாநாடொன்றிலும் கலந்துகொண்டார்.
அங்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆஷாத் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இச்சந்திப்பின்போதே தரக்குறைவான மருந்து வகைகளை இலங்கைக்கு வழங்கும் இந்திய நிறுவனங்கள் பற்றி இந்திய சுகாதார அமைச்சரிடம் விளக்கமளித்தார்.
கேள்விப்பத்திரம் பெற்றுக்கொண்டு குறித்த நேரத்துக்கு மருந்து வகைகளை வழங்காமை, சில வேளைகளில் மருந்துக் குப்பிகளுக்குள் அநாவசியமான பொருட்கள், தரக்குறைவான மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள், மருந்து தட்டுப்பாடொன்று ஏற்பட்டவுடன் அதிகவிலைக்கு இலங்கைக்கு மருந்துகள் வழங்குதல் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை சுகாதார அமைச்சர் கையளித்தார்.
2013ஆம் ஆண்டு அரசாங்கம் சுகாதார சேவைக்கென 215 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இவற்றில் 25 பில்லியன் ரூபாவை மருந்து கொள்முதலுக்காக மட்டும் இலங்கை அரசாங்கம் செலவிடுகிறது என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இந்திய அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
இந்திய நிறுவனங்கள் தரமான மருந்து வகைகளை வழங்காத கார ணத்தினாலும், தேவையான மருந்து வகைகளை உரிய நேரத்தில் வழங்காத காரணத்தினாலும் மருந்துத் தட்டுப் பாடு ஏற்பட்டவுடன் இதனை சாதக மாகப் பயன்படுத்தி அதிக விலைக்கு மருந்து வகைகளை வழங்குவதாலும் ஒதுக்கப்படும் பணம் வீணாவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின், வேண்டுகோளையடுத்து மருந்து வகைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதுடன், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுச் சபையூடாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சர் தெரிவித் துள்ளார்.
இந்தியாவிலிருந்து மருந்து இறக்குமதியின்போது எதிர்நோக்கியுள்ள குறைபாடு தொடர்பாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, கவலையைத் தெரிவித்திருந்தார். இலங்கைக்கு தரமான மருந்து வகைகளை வழங்குவதற்குரிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி யளித்தார்.(மூலம்: http://www.thinakaran.lk/2013/02/23/?fn=n1302231 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.