நூதனசாலையில் களவில் பங்கெடுத்த 8 சந்தேக நபர்கள் பற்றி கொழும்பு பிரதான நீதவானிடம் புலனாய்வு பொலிஸார் விவரமான ஓர் அறிக்கையை நேற்று சமர்ப்பித்தனர்.
ஒன்பதாவது சந்தேக நபரான எல்.பிரியசாந்தவை களவு நடந்த தினம் நூதனசாலை வளவில் கண்டதாக நூதனசாலை காட்சியறைகளுக்குப் பொறுப்பான அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா நீதவானிடம் கூறினார்.
இந்த அதிகாரியும் களவு போன நாணயத்தாள்களை வாங்கியதாகக் கூறப்படும் பெற்றோல் நிலைய முகாமையாளர் திஸாநாயக்கவும் அடையாளம் காட்டுவதற்காக 9ஆவது சந்தேக நபர் பிரியசாந்த அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படவுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்களிடையே பாகுபாடு காட்டுவதாக சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறினார்.
நூதனசாலையிலிருந்து அகற்றப்பட்ட வைரம், தங்கம் என்பவற்றை வாங்கியதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபர்களை பிணையில் செல்வதற்கு அனுமதியளித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சில பழைய நாணயங்களையும் பித்தளை துண்டுகளையும் வாங்கிய தனது வாடிக்கையாளருக்கு பிணை மறுப்பதாகக் கூறினார்.
தனது கட்சிக்காரர்களையும் பிணையில் விட வேண்டும் என அவர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.
வாதப்பிரதிவாதங்களை அவதானித்த நீதவான் சந்தேக நபர்களை பெப்ரவரி 20 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.