-சுபுன் டயஸ்
75 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை ராகமையில் குறுகுலம்ப எனுமிடத்திலும் ஆமர் வீதி பகுதியிலும் விசேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இது துறைமுகத்துக்கு வெளியே கைப்பற்றப்பட்ட ஆகக்கூடிய சட்டவிரோத சிகரெட்டாகும். ராகமையில் ஒரு களஞ்சியசாலையில் 200 பொட்டிகளில் 13,145 சிகரெட் பெட்டிகளும் ஆமர் வீதியில் 200 பெட்டிகளில் 2,000 சிகரெட் பொட்டிகளும் பிடிபட்டன.
இந்த இரண்டு திடிர் பாய்ச்சல்களின்போது நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். வரி கட்டாத இந்த சிகரெட்டுக்கள் காரணமாக அரசாங்கத்துக்கு 65 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது.
பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தரவின் மேற்பார்வையில் விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பிரிவு பொலிஸ் மா அதிபர் ஆர்.டப்ளியூ.எம்.சீ. ரணவன வழிநடத்தலில் ஒரு விசேட அதிரடிப் படை அணி இந்த சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டன.
இவ்வாறான சட்டவிரோத சிகரெட் இறக்குமதிகளை நன்கு கைதேர்ந்த குழு மேற்கொண்டு வருவதாகவும் இவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப் படை குறிப்பிட்டுள்ளது.
(http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/58709-75-.html)

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.