......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 24 February 2013

பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட நபர் 60 அடி உயரத்திலிருந்து குதித்து உயிரிழப்பு

By Sridaran 

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கொட்டகலை பிரதேசத்தில் ரயில் தண்டவாளம் ஊடாக பொலிஸார் அழைத்துச் சென்ற போது உயரமான பாலத்திலிருந்து குதித்துத் தப்பிக்க முயன்ற சந்தேக நபர் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று முன்தினம் 21 ஆம் திகதி இடம் பெற்றுள்ளது.

நோர்வூட் பிரதேச தோட்டமொன்றினைச் சேர்ந்த குறிப்பிட்ட சந்தேக நபரொருவர் கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டு முச்சக்கர வண்டி ஒன்றையும் நிலம் ஒன்றினையும் கொள்வனவு செய்துள்ளார்.

குறிப்பிட்ட சந்தேக நபரைக் கைது செய்த தலாங்கம பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் பின்பு சந்தேக நபர் தெரிவித்த தகவலொன்றைத் தொடர்ந்து சந்தேக நபரைக் கொட்டகலைப் பிரதேசத்துக்கு பொலிஸார் அழைத்துச் சென்றனர். 

அட்டன் ரயில் நிலையத்துக்கும் கொட்டகலை ரயில் நிலையத்துக்குமிடையிலுள்ள ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது கொட்டகலை கிறிஸ்டல்பார்ம் தோட்டத்துக்கு அருகிலுள்ள 60 அடி உயரமான பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளார். 60 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சடலம் நாவலப்பிட்டி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

(மூலம்:http://www.virakesari.lk/article/local.php?vid=3175 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE