"உங்கள் வாழ்க்கையின் லட்சியமென்ன?" இருவருமே சொதப்பலாய் பதில் சொல்லி வேலையில்லாமல் வெளியே வந்தார்கள்.
சோமு சொன்னான் "மாப்பிள்ளே கவலைய விடுடா, இது ஒன்னுதான் வேலையா. Take it easy. இத மறந்துட்டு அடுத்த வேலையை தேடுவோம். அப்பத்தான் அடுத்தமுறை நல்லா செய்யமுடியும்"
ராமோ வெகு யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தான்.
அடுத்த நேர்முகத்தேர்வு. இருவருக்குமே அதிர்ச்சி, ஏனெனில் மீண்டும் அதே கேள்வி.
போனமுறை சொன்ன பதிலை வேறு விதமாக சொன்னான், சோமு.
பதிலையே மாற்றி தேர்வு நடத்துபவரையே அசர அடித்து வேலை வாங்கினான் ராமு.
வெளியே ஏமாற்றத்துடன் வந்த சோமு.
"மாப்ளே எப்படிடா வேலை கிடைச்சுது, என்னடா சொன்னே?"
"போனமுறை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சரியா இருக்கும்னு யோசிச்சுகிட்டே வீடு போய் சேர்ந்தேன். அதுதான் உதவுச்சு. இந்த வேலை போனதுக்கு வேணும்னா Take it easyன்னு சொல்லலாம். ஆனா கேட்ட கேள்விகளை அப்படி உதறிடக்கூடாது. அந்தக் கேள்வி எப்போ வேணுமின்னாலும், யார் வேணுமின்னாலும் கேட்கலாம், அதுக்கு சரியா பதில் சொல்லிட்டா வெற்றி நம் பக்கம்"ன்னு சொல்லி வேலையில் சேர்ந்தான் ராமு.
அதனால நேர்முகத்தேர்வோ, தொலைபேசித்தேர்வோ.. கேள்விகளை மறக்காதீங்க. அது காலத்துக்கும் உதவும். ”உங்க வாழ்க்கையின் லட்சியம் என்ன?” இதுதான் என்கிட்டையும் முதல் முறையா நேர்முகத்தேர்வுல கேட்டப்பட்ட கேள்வி. நானும் சோமுமாதிரிதான் சொதப்பிட்டு ‘பல்பு’ வாங்கிட்டு வந்தேன் வாழ்க்கைக்கும் மறக்கவே முடியாது.
(rai)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.