-ஒலிந்தி ஜயசுந்தர, எம்.சுக்ரி, ரி.லோஹித்
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் வீடு புனர்நிர்மாணம் செய்துகொடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ரிசானாவின் சொந்த ஊரான மூதூர் பள்ளிவாசலொன்றும் கட்டிக்கொடுக்கப்படும் எனவும் பணியகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல்சேனா லங்காதிகார இன்று வியாழக்கிழமை ரிசானாவின் வீட்டுக்கு விஜயம் செய்தார்.
ரிசானாவின் குடும்பத்திற்கு தேவையான நிதியுதவிகளை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்வர் என அவர் கூறினார்.
தற்போதும் கூட ரிசானாவின் குடும்பம் வருத்தப்படுகின்றது என தெரிவித்த வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர், தனது மகளின் சடலத்தை தருமாறு ரிசானாவின் தாய் மீண்டும் கேட்டதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, ரிசானா நபீக்கின் குடும்பத்தினர் வசிப்பதற்கு சகல வசதிகளும் கொண்ட வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு சவூதி அரேபியா தனவந்தரொருவர் முன்வந்துள்ளதாக பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
'ரிசானா நபீக்கின் குடும்ப வறுமை நிலையை கருத்திற் கொண்டு எந்தநோக்கத்திற்காக அவர் சவூதி அரேபியாவுக்கு சென்றாரோ அது நிறைவேற்றப்பட வேண்டும்
"இது தொடர்பில் சஊதி அரேபியாவை சேர்ந்த தனவந்தர் ஒருவருடன் கலந்துரையாடியபோது நான்கு மாத காலத்திற்குள் ரிசானா நபீக்கின் குடும்பத்தினர் வசிப்பதற்கு சகல வசதிகளும் கொண்ட வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளதாக" பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ரிசானா நபீக்கின் வீட்டை நோக்கி மக்கள் கூட்டங்கூட்டமாகச் இன்று வியாழக்கிழமை சென்று தங்களின் அனுதாபங்களை தெரிவிக்கின்றனர். மூதூர் பிரதேச மக்களோடு வெளி பிரதேச மக்களும் வந்தனர்.
இதேவேளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரும் றிஸானா நபீக்கின் வீட்டுக்கு சென்று குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் வழங்கினார். (படங்கள்முறாசில்)

(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.