-றிப்தி அலி
நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிப்பதாக கலாசார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க உறுத்தியளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே கலாசார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவிற்கும் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாதின் கருத்து
இது தொடர்பாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் துணை செயலாளர் ரம்ஸின் - தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,
"விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிப்பதாக கலாசார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க உறுத்தியளித்துள்ளார். இந்த திரைப்படத்தினை தடை செய்வதற்கு கோரும் சுமார் 50 காரணங்கள் உள்ளடங்கிய மகஜரொன்றும் இதன்போது அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த காரணங்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்தரையாடிய பின்னர் இறுதி தீர்மானமொன்று வருவதாக தெரிவித்தார்.
இதேவேளை, ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் தணிக்கை சபையின் தலைவர் காமினி சமரசேகர ஆகியோரை சந்தித்தும் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்குமாறும் கோரிக்கை விடுத்தோம். இதற்கு சாதகமாக பதில்களையே அவர்கள் வழங்கினர்" என்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அறிக்கை
இதேவேளை, விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அறிவித்துள்ளது.
இந்த திரைப்படம் தொடர்பில் விமர்சன அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் காரணமாக கடந்த ஜனவரி 28ஆம் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் சுமார் 25 பேர் கொண்டு குழுவினருக்கு இந்த திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிட கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏகமனதாக தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. இந்த திரைப்பட விமர்சனம் தொடர்பாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
இந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"எமக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய விஸ்வரூபம் திரைப்படம் கடந்த ஜனவரி 28ஆம் திகதி இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன திரையரங்கில் பரிசிலனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது இந்த படத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள், சிரேஷ்ட முஸ்லிம் கலைஞர்கள் மற்றும் பல முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கலாக 20 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பார்வையிட்டனர்.
இதனை பார்வையிட்ட யாவரும் இந்த படம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை முழுமையாக நோகடிப்பதாகவும் பாதிப்பதாகவும் உள்ளமையினால் விஸ்வரூபம் என்ற இந்த திரைப்படத்தை இலங்கையில் திரையிடக்கூடாது எனும் கருத்தை வெளியிட்டனர்.
இதற்காக முன்வைக்கப்பட்ட காரணங்களில் சில பின்வருமாறு:
முஸ்லிம்களின் மனதை துன்புறுத்துவதும் இதன் நோக்கமாகவுள்ளது. இந்த நாட்டில் இனக் குரோத உணர்புகளை உண்டாக்க சில குழுக்கள் முயற்சிக்கும் இந்த வேளையில் இந்த படத்தை நாட்டில் திரையிடுவது சமூகத்தில் மேலும் துன்பத்தையும் கவலையையும் உருவாக்க கூடும்".
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் கருத்து
இதேவேளை, நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோர பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தை பார்வையிட்ட பின்னர் தடைசெய்யவேண்டும் என என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
"முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளமையினால் இலங்கையில் இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளேன்" என சிரேஷ்ட அமைச்சர் பௌசி மேலும் தெரிவித்தார்.
இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவரின் கருத்து
விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானம் எடுக்கப்படவில்லை என இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவித்தார்.
"இந்த திரைப்படத்தை திரையிடுவதா? இல்லை என்பது தொடர்பில் தணிக்கை சபையினாலேயே தீர்மானிக்க முடியும். அவர்களின் தீர்மானத்திற்கு அமையவே எங்களினால் செயற்பட முடியும்" என அவர் குறிப்பிட்டார்.
சமூகங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்படாத வகையில் சிறந்த தீர்மானமொன்று விரைவில் எடுக்கப்படும் என இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன தலைவர் மேலும் தெரிவித்தார்.

- இந்த படத்தின் 95 சதவீதமான பகுதி பயங்கரவாதிகளாக (அல் குவைதா அங்கத்தவர்களாக) சித்தரிக்கப்படும் முஸ்லிம் பாத்திரங்களை (முஸ்லிம் பெயர்கள், உடைகள்) கொண்டதாகவுள்ளது.
- படத்தின் 70 சதவீதமான பகுதியில் முஸ்லிம் கலாசார சடங்குகள், பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புபடுத்தி காண்பிக்கப்படுகின்றன. குண்டு வெடிப்பு மற்றும் கொலைகாட்சிகளின்போது அல்லாஹ் அக்பர் எனும் சுலோகம் தொடர்ந்து எழுப்பப்படுகின்றது. மேலும் அல்லாஹ்வின் பெயர் ஒவ்வொரு சம்பவத்தின்போதும் கூறப்படுவது முஸ்லிம்களின் மனதுக்கு எரிச்சலூட்டுவதாக உள்ளது.
- கொடூரமான சண்டை காட்சியொன்று தொடங்கு முன், படத்தின் 40ஆவது நிமிடத்தில், 5 தடவைகள் தொழுகையின் போதும் ஹஜ் சடங்கின் போதும் ஓதப்படும் துஆ ஓதப்படுகின்றது.
- படத்தின் முதல் 20 நிமிடங்களில் மட்டுமே சுவாரஸ்யமான கலையம்சம் கொண்ட காட்சிகள் இடம்பெறுகின்றன. எஞ்சிய பகுதியில் பயங்கரவாதிகளுக்கான பயிற்சி மற்றும் பயங்கரவாத செயல்களுடன் தொடர்பான நல்லொழுக்கத்திற்கு மாறான சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளே காண்பிக்கப்படுகின்றன. இவை நிச்சயமாக முஸ்லிம்கள் பற்றி பிழையான எண்ணங்களை உருவாக்கக் கூடியன
முஸ்லிம்களின் மனதை துன்புறுத்துவதும் இதன் நோக்கமாகவுள்ளது. இந்த நாட்டில் இனக் குரோத உணர்புகளை உண்டாக்க சில குழுக்கள் முயற்சிக்கும் இந்த வேளையில் இந்த படத்தை நாட்டில் திரையிடுவது சமூகத்தில் மேலும் துன்பத்தையும் கவலையையும் உருவாக்க கூடும்".
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் கருத்து
இதேவேளை, நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோர பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தை பார்வையிட்ட பின்னர் தடைசெய்யவேண்டும் என என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
"முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளமையினால் இலங்கையில் இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளேன்" என சிரேஷ்ட அமைச்சர் பௌசி மேலும் தெரிவித்தார்.
இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவரின் கருத்து
விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானம் எடுக்கப்படவில்லை என இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவித்தார்.
"இந்த திரைப்படத்தை திரையிடுவதா? இல்லை என்பது தொடர்பில் தணிக்கை சபையினாலேயே தீர்மானிக்க முடியும். அவர்களின் தீர்மானத்திற்கு அமையவே எங்களினால் செயற்பட முடியும்" என அவர் குறிப்பிட்டார்.
சமூகங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்படாத வகையில் சிறந்த தீர்மானமொன்று விரைவில் எடுக்கப்படும் என இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன தலைவர் மேலும் தெரிவித்தார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.