......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 10 January 2013

சிறுமியை வல்லுறவுக்குட்பட முயன்ற இளைஞர் கைது

(எஸ்.மாறன்)

அட்டாளைச்சேனை, திராய்க்கேணி பிரதேசத்தில் கடைக்கு சென்ற 17 வயது பாடசாலைச் சிறுமியை பலாத்தகாரமாக இழுத்துச் சென்று வல்லுறவுக்கு ஈடுபட முயன்ற 21 வயதுடைய இளைஞரை அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.


குறித்த சிறுமி தனது வீட்டுக்கு அண்மையில் உள்ள கடைக்கு சம்பவதினம் மாலை 6.30 மணிக்கு தேங்காய் எண்ணெய் வாங்குவதற்கு வீதியால் சென்றுகொண்டிருந்தபோது சிறிய ஒழுங்கையில் கறுத்தநிற ரீசேட்டுடன் தலையை மறைத்தவாறு பதுங்கி நின்ற கொண்டிருந்தவர் திடீரென வீதியால் வந்த சிறுமியின் வாயை பிடித்து பொத்தியவாறு ஒழுங்கைக்கு இழுத்துச்சென்று பாலியல் வல்லுறவுக்கு ஈடுபட முயன்றுள்ளார். 

இந்நிலையில் சிறுமி அவனிடம் இருந்து தப்பி வீட்டிற்குச் சென்று தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து குறித் இளைஞரை பொலிஸார் நேற்று இரவு 8 மணிக்கு கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் ஒலுவில் இரண்டாம் பிரிவு பாடசாலை வீதியைச் சேர்ந்தவர் எனவும் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE