......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 12 January 2013

மீன்பிடிப் படகுகளை ஒலுவில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்க கோரிக்கை


Oluvil Harbour- யு.கே. காலித்தீன் -
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் இயந்திர படகுகளை ஒலுவில் துறைமுகத்தில் நிறுத்திவைக்க அனுமதி வழங்குமாறு துறைமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனாவிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஏ.எம்.ஜெமீலே இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பிரதி அமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக அடிக்கடி கடல் கொந்தளிப்புக்கள் இடம்பெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்.
இதன்போது கடற்றொழில் பாதிக்கப்படுகின்றன. இக்கால பகுதிகளை மீனவர்களின் இயந்திர படகுகளை  இப்பிரதேசங்களிலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் அல்லது படகுத் தரிப்பிடத் துறைகளில் பாதுகாப்பாக கொண்டு நிறுத்துவதே வழக்கமாகும்.
ஆனால் அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்த தரிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. ஆதனால் இப்பகுதி மீனவர்கள் கடல் கொந்தளிப்பு மற்றும் அனர்த்தங்கள் இடம்பெறும் காலப்பகுதிகளில் தமது மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பாக தரித்து வைப்பதில் பெரும் சிரமங்களையும் சவால்களையும் எதிர்நேக்கி வருகின்றனர்.
சிலவேளைகளில் இந்த மீன்பிடிப் படகுகள் அனர்த்தங்களில் சிக்கி சேதமடைகின்றன. இதனால் இப்பகுதி மீனவர்கள் நஷ்டமடைவதுடன் அதனை நம்பி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களும் அவர்களது குடும்பங்களும் தொழில் வாய்ப்புக்களையும் இழக்க நேரிடுகின்றது.
தற்போது இப்பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதால் அம்பாறை மாவட்ட மீனவர்கள் இப்பிரச்சினைகளை வெகுவாக எதிர்நோக்கியுள்ளனர். கடந்த வருட முற்பகுதியில் இதே போன்றதொரு நிலைமை ஏற்பட்டபோது ஒலுவிலில் அமைக்கப்பட்டு வருகின்ற துறைமுகத்தில் படகுகள் அனைத்தையும் நங்கூரமிடுவதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டிருந்தமையை இங்கு சுட்டிக்காட்டி அதற்காகா மீண்டுமொருமுறை நன்றியை கூற கடமைப்பட்டவனாகவும் இருக்கின்றேன்.
அகையினால் தற்போதைய காலநிலை சீர்கேடு மற்றும் கடல் கொந்தளிப்பை கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்ட மீனவர்களின் படகுகளை ஒலுவில் துறைமுகத்தில் தரித்து வைப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து உதவுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.
இந்த கடிதத்தின் பிரதிகளை இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE