......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 26 January 2013

கல்குடா தொகுதியிலுள்ள பிரதேச செயலக எல்லைகள் தொடர்பான கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி கலைந்துள்ளது


meeting-றப்தான்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியிலுள்ள பிரதேச செயலக எல்லைகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை தீர்ப்பதற்காக கொழும்பில் நேற்று(24.1.2013) நடைபெற்ற கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி கலைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள ஒரு சில கிராம சேவகர் பிரிவுகளை ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகங்களுடன் இணைப்பது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தீர்ப்பதற்காக பாராளுமன்ற கட்டிடத்தில் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமையில் நேற்று(24.1.2013) கூட்டமொன்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்ததை பிரதி நிதித்துவப்படுத்தும் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயக மூர்த்தி முரளிதரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பசீர் ஷேகுதாவூத், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்பரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கே.துரைராஜசிங்கம், மற்றும் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் அருன் தம்பி முத்து மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாகரை பிரதேச செயலளார் எஸ்.ராகுலநாயகி, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார், வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி திணேஸ், கிரான் பிரதேச செயலாளர் தணபால சிங்கம் உட்பட எல்லை நிர்ணயக்குழு அதிகாரிகள் பொது நிருவாக உள் நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது இரண்டும் தரப்பும் தத்தமது நியாங்களையும் வாதங்களையும் முன் வைத்தனர். இரண்டு தரப்புக்களும்  எழுத்து மூலமாகவும் வாய் மொழி மூலமாகவும் முன் வைத்த அறிக்கைகளை அமைச்சர் ஜோன் செனவிரட்ன உள்ளிட்ட அதிகாரிகள் கேட்டறிந்து கொண்டனர்.
எனினும் இந்த கூட்டம் எந்தவித தீர்மானமுமின்றி முடிவடைந்துள்ளது.
மீண்டும் ஒரு கூட்டம் இது தொடர்பில் நடாத்தப்படுமென அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.



(kattankudyinfo)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE