......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 10 December 2012
சூடானின் துறைமுகத்திற்கு மீண்டும் விரைந்த ஈரானின் போர்க்கப்பல்கள்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு
செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சூடான் நாட்டின் போர்ட் சூடான் துறைமுகத்திற்கு ஈரான் நாட்டின் இரு ஏவுகணை மற்றும் விமானம் தாங்கி கப்பல்கள் விரைந்துள்ளன.
கடந்த இருமாதங்களில் சூடான் நாட்டின் துறைமுகத்திற்கு ஈரானிய போர்க்கப்பல்கள் வந்துள்ளது இது இரண்டாவது முறையாகும்.
நேச நாடுகளுடனான கடற்பயிற்சியை மேற்கொள்ளும் நடவடிக்கையாக இந்த வருகை இருக்கிறது என்று ஈரான் கூறியுள்ளது. பிராந்திய மற்றும் கடல் எல்லைகள் தொடர்பான அரசியல் மற்றும் தூதரக நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்படும் என்று அது கூறியுள்ளது.
இந்நிலையில் ஈரானின் கப்பல்கள் அங்கு சென்றமைக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கடத்தும் நோக்குடனேயே கப்பல்கள் அங்கு சென்றுள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னரும் ஈரானின் போர்க்கப்பல்கள் சூடானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தன.
தனது ஆயுதத் தொழிற்சாலையொன்றின் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தியதாக சூடான் குற்றஞ்சாட்டி சில நாட்களுக்குப் பின்னரே ஈரானிய கப்பல்கள் அங்கு சென்றிருந்தன.
எனவே இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்குடனேயே ஈரானிய கப்பல்கள் அங்கு சென்றிருந்ததாக அக்காலப்பகுதியில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஈரான் கப்பல்கள் தமது வழமையான விஜயத்தின் ஓர் அங்கமாகவே தமது துறைமுகத்திற்கு வருகை தந்ததாக சூடானின் வெளியுறவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.
இத்தொழிற்சாலையிலிருந்து ஈரான், சிரியா, மற்றும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, இஸ்லாமிக் ஜிஹாட் உட்பட போராளிக்குழுக்களுக்கு ஆயுதம் விநியோகிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.