ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லேங்க்லெட் ஆகிய 5 மீனவர்கள் கடந்த 28-11-2011-ல் விசைப் படகில் நெடுந்தீவுக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது. போதை பொருள்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது பொய்யான வழக்கு என்றும், கைது செய்யப்பட்ட 5 மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று, இலங்கை நீதிமன்றத்தில் தமிழக மீனவர்கள் சார்பில் வாதாட வழக்கறிஞரொருவரை நியமிக்கவும், நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு மூலம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் ரூ. 2 லட்சம் நிதியை முதல்வர் ஜெயலலிதா கடந்த 4-12-2011-ல் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையில் 5 மீனவர்களுக்கும் பிணை மறுக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.