......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 6 December 2012

சர்வதேச தீவிரவாத தாக்குதல்களில் வீழ்ச்சி


கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச அளவிலான தீவிரவாத தாக்குதல்களில் வீழ்ச்சி கண்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொருளாதார மற்றும் அமைதிக் கான நிறுவனத்தால் கடந்த 10 ஆண்டுகளில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரவுகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2002 தொடக்கம் 2011 வரையான காலத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பிலே ஆய்வுநடத்தப்பட்டது.

இதில் அதிகபட்சமா ஈராக்கில் மாத்திரம் மூன்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. 158 நாடுகளை மையமாக வைத்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 2005 முதல் 2007 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஈராக் தீவிரவாத தாக்குதல்களில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட் டுள்ளது.
இது தவிர சர்வதேச அளவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் ஈராக்கை அடுத்து பாகிஸ்தான் (12 வீதம்), இந்தியா (11 வீதம்) மற்றும் ஆப்கானிஸ்தான் (10 வீதம்) அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் வட அமெரிக்காவே தீவிரவாத தாக்குதலால் குறைவான பாதிப்பை சந்தித்த பிராந்தியமாக கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கு ஐரோப்பா மாற்றும் லத்தீன் அமெரிக்கா தீவிரவாதத்தால் குறைவாக பாதிக்கப்பட்ட பிராந்தியங்களாகும். இதுமட் டுமல்லாமல் சர்வதேச அளவில் 2002 முதல் 2011 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 31 நாடுகள் தீவிரவாதத் தாக்குதல் களை அனுபவிக்காத நாடுகளாக பதிவாகியுள்ளன.
அல் கொய்தா அமைப்பின் பலம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் அந்த தரவில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் இடம்பெற்ற 4564 தீவிரவாத தாக்குதலில் அல் கொய்தா ஒரே ஒரு தாக்குதலுக்கு மாத்திரமே பொறுப்புக் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அல் கொய்தாவின் யெமன், வடகொரிய கிளைகள் பிரதான அல் கொய்தா அமைப்புக்குள் உள்ளடக்கப்படவில்லை.
இதனிடையே குறைவான வருமானம் பெறும் நாடுகளை விடவும் மத்திய நிலையில் வருமானம் பெறும் நாடுகளிலேயே தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப் பட்டிருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே வறுமை, தீவிரவாதத்திற்கான பிரதான காரணி அல்ல என்று கூறப்பட் டுள்ளது. சர்வதேச அளவில் தீவிரவாதத் தாக்குதல்கள் வீழ்ச்சி கண்டாலும் சிரியா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக மத்திய கிழக்கில் அது மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE