......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 8 December 2012

மீண்டும் நிலவை நோக்கிப் பயணம்!


By Kavinthan Shanmugarajah 
நாசாவின் முன்னாள் அதிகாரிகள் சிலர் இணைந்து நிலவுக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் பொருட்டு நிறுவனமொன்றினை ஆரம்பித்துள்ளனர்.

அந்நிறுவனத்திற்கு அவர்கள் 'கோல்டன் ஸ்பைக்' எனப் பெயரிட்டுள்ளனர்.
எனினும் இப் பயணத்திற்கான கட்டணம் தான் வாயை பிளக்கவைக்கின்றது. ஆம் இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் 1.5 பில்லியன் அமெரிக்கடொலர்களாகும். இது இருவருக்கான கட்டணமாகும்.
நாடுகள் மற்றும் அரசாங்கங்களை குறிவைத்தே இதனை ஆரம்பித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது. மற்றைய நாடுகள் ஆராய்ச்சி நோக்கத்திற்காக அல்லது தேசத்தின் பெருமைக்காக அங்கு செல்லலாம் எனவும் குறிப்பிடுகின்றது.
இந் நீண்ட தூர சவால் மிக்க பயணத்திற்கான உடைகள் மற்றும் சில உபகரணங்களைவேறு நிறுவனங்களிடம் தயாரிக்க ஒப்படைத்துள்ளதுடன் சிலவற்றை ஏற்கனவே இயங்கிவரும் விண்வெளி நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது.
இதற்காக தற்போது உபயோகத்தில் உள்ள விண்வெளி ஓடங்கள் மற்றும் தொழிநுட்பங்களை 'கோல்டன் ஸ்பைக்' பயன்படுத்தவுள்ளது.

நாசா இறுதியாக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவிற்கு பயணித்தது. மேலும் செலவினைக் கருத்தில் கொண்டு நிலவிற்கு பயணிப்பதையும் நிறுத்திக்கொண்டது.+


(veerakesari)


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE