......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Sunday, 30 December 2012
சீனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கடந்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சீனர்களின் எண்ணிக்கை திடீரென 164 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தகவல் ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு வந்த சீனர்களின் எண்ணிக்கை, 164 வீதத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 3353 சீனர்கள் இலங்கை வந்துள்ளனர்.
அதேவேளை, இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 22,176 சீனர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது 46 சதவீத அதிகரிப்பாகும். இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு சீனர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள் அல்ல என்றும் கூறப்படுகிறது.
இலங்கையில், சீனாவினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் பணியாற்றுவதற்காக வந்த சீனர்களும் இதில் உள்ளடங்கியுள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 11 மாதங்களில், மாலைதீவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனர்களின் எண்ணிக்கையும், சுமார் 15 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் மாலைதீவுக்கு பயணம் மேற்கொண்ட 8இலட்சத்து 66,ஆயிரம் வெளிநாட்டவர்களில், 24.8 வீதமானோர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.