கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ஷின்கோ அபெலின் லிபரல் ஜனநாயக கட்சி பாராளுமன்ற கீழ் சபையில் மொத்தமுள்ள 480 ஆசனங்களில் 294 ஆசனங்களை வென்றுள்ளது. அத்துடன் கூட்டணியான கொமைடோ கட்சி 31 ஆசனங்களை வென்றுள்ளது. இதனால் எதிர் கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆசனங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மறுபுறத்தில் ஆளும் கட்சியின் ஆசனங்கள் 230 இல் இருந்து 57 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் தாம் எதிர்பார்த்ததை விடவும் மக்கள் ஆதரவளித்திருப்பதாக புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் ஷின்கோ அபெ குறிப்பிட்டுள்ளார். எனினும் கடந்த ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்கு பின்னர் வீழ்ச்சி கண்ட ஜப்பான் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் சர்ச்சைக்குரிய தீவு தொடர்பில் சீனாவுடனான முறுகல் நிலைக்கு தீர்வுகாணுதல் ஆகிய சவால்களுக்கு புதிய பிரதமர் முகம் கொடுக்கவுள்ளார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.