......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 4 December 2012

இஸ்ரேலுக்கான தூதுவரை மீள அழைக்க பிரான்ஸ், பிரிட்டன் ஆலோசனை


பலஸ்தீனத்திற்குள் சட்ட விரோதமாக 3000 யூதக் குடியிருப்புகளை அமைக்கும் இஸ்ரேலின் புதிய திட்டம் குறித்து பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கான இஸ்ரேல் தூதுவர்களிடம் குறித்த நாடுகள் விளக்கம் கோரியுள்ளன.

இஸ்ரேலின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுக்கான தமது தூதுவர்களை மீள அழைத்துக் கொள்ளவும் பிரிட்டன், பிரான்ஸ் அரசுகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பலஸ்தீனை ஐ.நா. சபை ஒரு நாடாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து இஸ்ரேல், ஆக்கிரமிப்பு மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் மேலும் 3000 வீடுகளை கட்ட தீர்மானித்தது.
இதற்கு இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே பிரான்ஸ¤ம், பிரிட்டனும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரான்ஸ் வெளியுறவு அமைச்சு விளக்கம் கோரி பிரான்ஸ¤க்கான இஸ்ரேல் தூதுவர் ஸொஸ்லி கெல்லுக்கு அழைப்பாணை விடுத்ததை இஸ்ரேல் தூதரகம் உறுதி செய்துள்ளது.

(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE