தமக்கு இந்துக்களையும் முஸ்லிம்களை யும் பிடிக்காது என்ற காரணத்தாலேயே அவரைக் கொலை செய்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அமெரிக்க குயின்ஸ் பகுதியில் மூன்று நண்பர்களுடன் வசித்து வந்த இந்தியர் சுனந்தோ சென் கடந்த வியாழக்கிழமை அன்று குயின்ஸ் சுரங்க ரயிலில் பயணிக்க சென்ற போது அடையாளம் தெரியாத ஒரு பெண், அவரை எதிரே வந்த ரயிலில் தள்ளிக் கொன்றார்.
பின்னர் அங்கிருந்து அவர் தப்பித்து சென்றார். ரயில் பாதையில் அமைக்கப்பட்டிருந்த வீடியோ கமராவில் அந்த பெண் உருவம் பதிவாகியி ருந்ததை பொலிஸார் கண்டு பிடித்து வெளியிட்டனர்.
2001ம் ஆண்டு நியூயோர்க் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தமக்கு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இதனாலே இந்தியரான சுனந்தோ சென்னை ரயிலில் தள்ளிக் கொலை செய்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில் அந்த பெண்ணுக்கு சுமார் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கக் கூடும்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.