அமெரிக்காவில் கனெக்டிகட் நகரில் உள்ள சான்டி ஹக் ஆரம்ப பாடசாலையிலேயே இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
அந்த ஆரம்ப பாடசாலை வகுப்பறைக்குள் முகத்தை மூடிக்கொண்டு இரண்டு துப்பாக்கிகளுடன் புகுந்த மர்ம மனிதன் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினான்.
இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பீதியில் உறைந்தனர். காப்பாற்ற முடிந்த மாணவர்களை ஆசிரியர்கள் காப்பாற்றினர் எனினும் துப்பாக்கி பிரயோகத்தில் 20 மாணவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர். 5 வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் பயிலும் பாடசாலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.
தகவல் அறிந்து பாடசாலைக்குள் பொலிஸார் விரைந்தனர். இதனையறிந்து மர்ம மனிதன் பாடசாலை வளாகத்திலிருந்து தப்பிச்செல்ல முயற்சித்துள்ளான். எனினும் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் அவன் கொல்லப்பட்டான்.
சம்பவம் அறிந்து பெற்றோர் பாடசாலைக்குள் வந்தமையினால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதயத்தை சுக்குநூறாக உடைந்து விட்டது.
சம்பவத்தையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் இந்த சம்பவம் மிகவும் மோசமானது. உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. குழந்தைகள் பலியான சம்பவம் தனது இதயத்தை சுக்குநூறாக உடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.