கிழக்கு ஆப்கானிஸ்தானின் நக்ரா மாகாணத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 9 முதல் 11 வயதான சிறுமிகளே கொல்லப்பட்டுள்ளனர்.
உலகில் அதிக கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட நிலமான ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக அவை அகற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக சோவியத் ஒன்றியத்துடனான யுத்தத்தின் போது ஆப்கான் எங்கும் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டன. இவைகளில் சிக்கி ஆண்டுதோறும் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
“இயற்கையாக சிறுவர்கள் புதுமையான பொருட்கள் மீது அதிக அவதானம் காட்டி வருகின்றனர். இதில் சோவியத் ஒன்றியம் ஆப்கான் எங்கும் புதைத்திருக்கும் கண்ணிவெடிகள் சிறுவர்களின் ஆர்வத்தைத் துண்டுவதாக உள்ளது” என்று யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.