......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

வளைகுடா பகுதியில் அத்துமீறல்: அமெரிக்கா மீது ஈரான் புகார்

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடற்பகுதிகளில் அமெரிக்க கடற்படையினர் அத்துமீறுவதாக அமெரிக்கா மீது ஐக்கிய நாடுகள் சபையில் ஈரான் குற்றம் சாட்டி யுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு ஐ.நா வுக்கான ஈரான் தூதர் முகமட் கஸயி வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது :- அமெரிக்க கடற்படையினர் ஈரான் நாட்டின் வான் பகுதியில் அத்து மீறி நுழைகின்றனர். கடற்கரையோரத்தில் அமைந்துள்ள புஷ்ஹெர் நகரின் வான் பகுதியில் ஒக்டோபர் மாதம் 7 முறையும் நவம்பர் 1 ஆம் திகதி ஒரு முறையும் அமெரிக்க கடற்படையினர் அத்துமீறி யுள்ளனர்.
சர்வதேச சட்டதிட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா நடந்து வருகிறது. இந்நடவடிக்கையினால் ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்படின் அதற்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும். அமெரிக்காவின் அத்துமீறல் நடவடிக்கையை ஐ. நா. கண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஈரானின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE