......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 24 November 2012

கொங்கோவில் மோதல் வலுக்கிறது !


ஆப்ரிக்க நாடான கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள வளம் மிக்க கோமா நகரை எம்-23 போராளிக்குழுக்கள் சமீபத்தில் கைப்பற்றினர்.
பழங்குடியின டுட்சிஸ் இனத்தை சேர்ந்த சூல்தானி மகெங்கா தலைமையிலான இந்த எம்-23 போராளிக்குழுவிற்கு பக்கத்து நாடுகளான ருவாண்டா, உகாண்டாவின் ஆதரவு உள்ளது. அவர்கள் இராணுவம் மற்றும் 19,000 ஐ.நா. அமைதிப்படையினரின் தடையையும் மீறி அந்த நகரை கைப்பற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது.


கொங்கோவின் தலைவர் ஜோசப் கபிலா பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். கோமா நகரை விட்டு வெளியேற ருவாண்டா, உகாண்டா நாட்டுத் தலைவர்களுடன் சேர்ந்து கபிலா விடுத்துள்ள வேண்டுகோளையும் அவர்கள் நிராகரித்து விட்டனர்.


கடந்த சில நாட்களாக நடந்த சண்டையில் அப்பகுதி மக்கள் 5,00,000 பேர் வீடுகளை காலி செய்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். தொடர்ந்து அப்பகுதிகளை கைப்பற்றிவரும் எம்-23 போராளிக்குழுக்கள் அடுத்து புகாவு நகரை கைப்பற்றுவோம் என்று எச்சரித்துள்ளானர்.

1997 முதல் 2003-ம் ஆண்டு வரை அங்கு நடைபெற்ற மோதலுக்கு 50,00,000 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐ.நா. அமைதிப்படை போராளிக்குழுக்களை தடுத்து நிறுத்தவில்லை என்று பிரான்சு அரசு குறை கூறியுள்ளது.

(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE