அதேபோல டுபாயில் வெல்டராக பணியாற்றி வருபவர் கோனர் மெக்ரெட்மொன்ட். இவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் பெயர் ரிபெக்கா பிளேக். இவர் டுபாயில் உள்ள ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு வாடகைக் காரின் பின் சீட்டில் வைத்து செக்ஸ் உறவு கொண்டது.
இந்த இருவருக்கும் தற்போது 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனைக்குப் பின்னர் இருவரும் நாடு கடத்தப்படுவர்.
29 வயதான ரிபெக்கா, இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். இவரும் அயர்லாந்தைச் சேர்ந்தவரான கோனரும், மது அருந்தியுள்ளனர். கிட்டத்தட்ட 10 மணி நேரம் குடித்த அவர்கள் பின்னர் ஒரு வாடகைக்காருக்குள் உறவில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சமயம் அங்கே வந்த வாடகைக்காரின் உரிமையாளார் பொலிஸிற்கு தகவல் கொடுத்துள்ளார். பொலிஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். ஆனால் தாங்கள் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்றும் நிர்வாண கோலத்தில் இருக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் இருவரும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக இருவருக்கும் எடுக்கப்பட்ட மரபணு சோதனையிலும் அவர்கள் உறவு கொண்டதாக முடிவு வரவில்லை.
இருப்பினும் இருவருக்கும் தலா 3 மாத சிறைத் தண்டனை விதித்து டுபாய் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் இருவரையும் நாடு கடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.