* பாடசாலைகளில் விளையாட்டு கட்டாயம்
* ஆர்வத்துக்கு புள்ளிகள்
* ஆர்வத்துக்கு புள்ளிகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் இலங்கையில் புதிய விளையாட்டுக் கலாசாரத்தினை முன் னெடுத்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இதற்காக இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினமின பத்திரிகையுடன் விளையாட்டுத்துறை தொடர்பான 'கெலிபிம' எனும் இணைப்பு மாதந்தோறும் வெளி யாகவுள்ளது. 'கெலிபிம' இணைப்பின் உத்தி யோகபூர்வ வெளியீடு மற்றும் 'அபே கெலிபிம' எனும் இணையத்தளம் ஆகியவற்றை நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உரை நிகழ்த்துகையி லேயே மேற்கண்டவாறு கூறினார்.
இதுவரை பதக்கங்களுக்கும் வெற் றிக்கும் மட்டும் எல்லை வரையறுக்கப்பட்டிருந்த விளை யாட்டுத்துறையமைச்சு சிறுவர் முதல் பெரி யவர் வரை நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் உள்ள அனைவரையும் விளையாட்டுடன் தொடர்புபடுத்தும் வகையிலேயே புதிய விளையாட்டு கலாசாரத்தினை உருவாக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்படி பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு கட்டாயம் ஆக்கப்பட வுள்ளது. ஒவ்வொரு மாணவரும் தாம் விரும்பிய ஏதாவதொரு விளையாட்டுத் துறையை தெரிவு செய்தேயாக வேண்டும். அத்துடன் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் ஒவ்வொரு மாணவனையும் மருத்துவ பரிசோதனைக் குட்படுத்துவதன் மூலம் அவர்கள் எந்த விளையாட்டில் சிறந்து விளங்குவர் என்பதனை பாடசாலை மட்டத்தில் கண்டு கொள்ளவுள்ளோம்.
மேலும் இவர்கள் விளையாட்டுத்துறையில் காட்டும் ஆர்வத்திற்கு வேறாக புள்ளிகள் வழங்கப்படும். அத்துடன் தேசிய மட்டத்திற்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இலகுவில் பல்கலைக்கழக அனுமதி பெற்றுக்கொள்ள வழிவகுக்கப்படும். இது தொடர்பான பத்திரத்தை அடுத்த வருடம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க வுள்ளோமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்களை நவீனமயப்படுத்துவதன் மூலம் கிராமத்து மக்கள் உள்ளிட்ட அனைவரும் நடைப் பயிற்சியில் ஈடுபடுத்தும் வகையில் எமது விளையாட்டு கலாசாரத்தை விரிவுபடுத்துவோமெனவும் அவர் கூறினார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.