......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 14 November 2012

இந்தியாவில் 2600 கோடி ரூபா சுருட்டிய மோசடி தம்பதியினர் கைது


(veerakesari)
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட ஸ்டாக் குரு இந்தியா நிதி நிறுவன அதிபர்களான உலாஸ் பிரபாகர் கைரே (33), ரக்‌ஷா உர்ஸ் (30) தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இவர்கள் இருவரும் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன் தலைமறைவாகினார்கள்.

தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 6 மாதத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக இவர்கள் வெளியிட்ட கவர்ச்சி விளம்பரங்களை நம்பி சுமார் 2 லட்சம் பேர் ரூ.2615 கோடி வரை முதலீடு செய்திருக்கக்கூடும் என்று டெல்லி பொலிஸார் கருதுகின்றனர்.


முதலீட்டாளர்களின் பணத்தை போலி பெயர்களில் தொடங்கிய 94 வங்கி கணக்குகளில் சேமித்து வைத்திருந்த இந்த மோசடி தம்பதியினர் கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன் டெல்லியில் இருந்து தலைமறைவாகி விட்டனர்.

இவர்களை கைது செய்ய டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு பொலிஸார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி பகுதியில் புதிதாக நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கி, அங்கும் மோசடியில் ஈடுபட்ட இவர்களை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், முக அமைப்பை மாற்றி, பல்வேறு போலி பெயர்களில் வாக்காளர் அடையாள அட்டை போன்ற புதிய ஆவணங்களை தயாரித்த இவர்கள், ஊருக்கு ஊர் பெயரை மாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE