சிரிய அரச ஊடகமான சானா வெளியிட்ட செய்தியில் இந்த தாக்குதலின் பின்னணியில் தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட தொலைக்காட்சி வீடியோவில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் சேதமடைந்த பல வாகனங் களும் அருகிலிருக்கும் கட்டி டங்களும் காண்பிக்கப் பட்டன.
குறித்த பகுதியில் நேற்றுக் காலை அரச தரப்புக்கும் கிளர்ச்சியா ளர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற் றுள்ளது. இதன்போது பல குடியிருப்பாளர்களும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தவிர குறித்த பகுதியில் இரு சிறு குண்டுகளும் வெடித்ததாக சானா செய்திச் சேவை கூறியுள்ளது. கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஜரமனா மாவட்டத்தில் பஷர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவானோர் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ஆயுதக்குழு ஒன்றை அமைத்து செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.