......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 29 November 2012

விமானத்தில் பறக்காமல் 201 நாடுகளுக்கு சென்ற வாலிபர்


நான்கு ஆண்டுகளில் விமானத்தில் பறக்காமல் கடல் மற்றும் தரைவழி என பஸ், ரயில் ஆகியவற்றின் மூலம் 201 நாடுகளுக்கு பயணித்து பிரிட்டனைச் சேர்ந்த வாலிபர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பல லட்சம் கிலோ மீற்றர் பயணம் செய்து உலகை சுற்றி வந்த முதல் வாலிபர் என்ற பெருமையினை பெற்றுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த கிராஹம் ஹக்கிஸ் (33) கடந்த 2009 ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதியன்று தனது பயணத்தை ஆரம்பித்தார். மொத்தம் 201 நாடுகளுக்கு இவர் சுற்றுப் பயணம் செய்தார். எந்த சூழ்நிலையிலும் வேறு நாட்டிற்கு செல்ல இவர் விமானத்தை பயன்படுத்தவே இல்லை.
இவர் மொத்தம் 1,426 நாட்களில் 1 இலட்சத்து 60 ஆயிரம் மைல்கள் (2 லட்சத்து 46 ஆயிரம் கிலோ மீற்றர்கள்) பயணித்துள்ளார். இறுதியில் ஆபிரிக்க நாடான தெற்கு சூடானை நேற்று முன்தினம் சென்றடைந்தார்.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE