......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 21 October 2012

இந்தியாவுடன் வர்த்தகத்துக்கு பொது கரன்சி ஏற்படுத்த பாகிஸ்தான் விருப்பம்

லாகூர்: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலரை விட்டுவிட்டு பொது கரன்சியை ஏற்படுத்த வேண்டுமென்று பாகிஸ்தான் ஆளும்கட்சி தலைவர் ஜெஹாங்கிர் பார் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து 40 பத்திரிகையாளர்கள், பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களிடையே பாகிஸ்தான் ஆளும் கட்சியின் மூத்த தலைவர் ஜெஹாங்கிர் பார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. கறுப்பு பட்டியலில் இருந்து 1209 பொருட்கள் வரும் டிசம்பரில் நீக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இருநாட்டு வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலர், ஈரோ, பிரிட்டன் பவுண்டு ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக இருநாடுகளுக்கும் பொதுவான கரன்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்கான சரியான நேரம் வந்து விட்டது. எனவே, இருநாடுகளும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை குழுவில் ஜெஹாங்கிர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.dinakaran

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE