......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 21 October 2012

ஒபாமாவை கொலை செய்ய சதித்திட்டம்: பங்களாதேஷ் இளைஞன் கைது

 அமெரிக்க, நியூயோர்க் நகரிலுள்ள பெடரெல் ரிசேர்வ் வங்கிக் கட்டடத்தை பாரிய குண்டுத் தாக்குதலொன்றை நடத்தி தகர்க்கத் திட்டமிட்ட பங்களாதேஷ் பிரஜையொருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குவாஸி மொஹமட் றிஸ்வானுல் அஷான் நாபிஸ் (21 வயது) ௭ன்ற இந்த இளைஞர் உயர்மட்ட அமெரிக்க அதிகாரியொருவரை கொல்லவும் சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

மேற்படி உயர்மட்ட அதிகாரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவாக இருக்கலாம் ௭ன சந்தேகிக்கப்படுகிறது. நாபிஸ் தீவிரவாத தாக்குதலொன்றை நடத்தும் திட்டத்துடன் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா வந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் லோவர் மான்ஹெட்டனிலுள்ள பெடரெல் ரிசேர்வ் கட்டடத்துக்கு வெளியே 1,000 இறாத்தல் நிறையுடைய போலி கார் குண்டொன்றை தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் வெடிக்க வைக்க முயற்சித்தபோது கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நாபிஸ் மீது பாரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய உபகரணமொன்றை பயன்படுத்த முயற்சித்தமை, அல்–கொய்தா போராளிக் குழுவுக்கு ஆதரவளிக்கும் செயற்பாட்டில் ஈடுபட முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கு வந்த அவர் தனது தாக்குதலுக்கு உதவக்கூடியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்துள்ளார். இந்நிலையில், அவரால் தொடர்புகொள்ளப்பட்டவர்களில் ஒருவர் அமெரிக்க புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவருக்கு இந்த விவகாரம் தொடர்பில் அறிவித்துள்ளார்.veerakesari

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE